ஹைதராபாத்தில் நேற்று நிகழ்ந்து இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில், தில்சுக் பேருந்து நிலையம் மற்றும் கோனார்க் திரையரங்கு அருகே இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 119 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் 5 பேர் மாணவர்களாவர். எம்பிஏ பயிலும் மாணவர்கள், ஆந்திராவில் நடைபெற உள்ள காவல்துறை பணியிடத்துக்கான தேர்வுக்கு புத்தகங்கள் வாங்க வந்த போது இந்த குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 14 பேரில் 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டது. காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் 19 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில், வெடிக்காத குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.








