
பயங்கரவாத ஒடுக்குமுறைகள் மற்றும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் அவர், அமெரிக்கக் கடற்படையினருக்கு விளக்கமளித்துள்ளார்.அமெரிக்காவின் இராணுவ பல்கலைக்கழகமொன்றில் இந்த பயிற்சிக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு முறைமைகள் குறித்து சவேந்திர சில்வா இதன் போது, அமெரிக்கக் கடற்படையினருக்கு விளக்கமளித்துள்ளார்.இதேவேளை, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் பதவிகளை வகிக்கக் கூடாது எனவும் அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.