சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் கோரிக்கை

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.உள்நாட்டு விசாரணைகளுக்கு மேலதிகமாக இவ்வாறு விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இலங்கையில் அழுத்தங்கள் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனிக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஜேன் லம்பார்ட் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்பத்தல் ஆகியன தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டுமென அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.யுத்த வலயத்தில் உட்கட்டுமான வசதிகளில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல், யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு முனைப்புக்களில் தமிழ் மக்களை இணைத்துக்கொள்ளாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *