
நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை இலங்கையிலிருந்து ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார்.
அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகளும் உடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுக்கிறது.
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 21ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளது.
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெறம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச் செயலர் பான் கீமூனிடம் இலங்கை அரசு கையளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.