கறுப்பு துணி மூலம் தனது இரு கண்களையும் கட்டுகிறார். தனது இரு கைகளாலும் கத்திரிக்கோல் கொண்டு சட சட வென முடிகளை தலை முடிகளை சீராக வெட்டுகிறார். இதனால் இருப்பவருக்கு எந்த ஒரு சின்ன கீறல் கூட ஏற்படவில்லை என்பதே விநோதம்.
குறித்த நபர் தனது 10 வயதில் இருந்து முடி திருத்தும் பணியை கையாண்டுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை தான் இத்தொழிலில் பெற்ற சிறப்புத்தேர்ச்சி இவரை இப்படி ஒரு சாதனைக்கு கூட்டிச்சென்றுள்ளது. தனது அபார திறமையை நிரூபித்து காட்டுகிறேன் என இவர் சவால் விட்ட போது இவரிடம் முடி வெட்ட யாரும் முன்வரவில்லை. காரணம் தங்களது இரு காதுகள் மீதுள்ள காதல்தான். ஆனால் இளைஞர்கள் சும்மா இருப்பார்களா? தைரியமாக சென்று இவரின் திறமையை பலர் அறிய செய்துவிட்டனர்.