எல்லாவற்றையும் துடைத்து அழித்துவிட்டோம் என்று சிங்களபேரினவாதம் நினைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் உணர்வுள்ள தமிழன் ஒருவன் இருக்கும்வரை அங்கும் இங்கும் எங்கும் தமிழர்களின்
விடுதலைக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதை எமது இளைஞர்கள் பலவகைகளிலும்
வெளிப்படுத்திவருகிறார்கள்.
இப்போது பிரித்தானியாவிலும் தேசியதலைவரின் உருவபடத்துடன் முத்திரையை வெளியிட்டு இருக்கிறார்கள்.இது வெறுமனே ஒரு சிறுமுத்திரையும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் படமும் என்பதைவிட
அதற்குள் மிகஆழமான ஒரு செய்தியும் இருக்கின்றது.
எமக்கு என்றென்றும் தேசியதலைவர்தான் ஒரே வழிகாட்டி என்றும் எமக்கான விடுதலைக்கான ஒரேஒரு நம்பிக்கையும் அவரே என்றும் காட்டிநிற்கின்றது.
புரட்சிகர தமிழீழமாணவர்கள் அமைப்பு காலத்தின் தேவை அறிந்து உருவான அமைப்பு.
உணர்வுமங்கி,நம்பிக்கை தளர்ந்து,பாதை அறியாமல் நிற்கின்ற எமது மக்களின் உணர்வை வற்றிவிடாமல் செய்வதில் புரட்சிகர தமிழீழமாணவர்கள் அமைப்பின் செயற்பாடுகள் மிகப்பெரியவை.
இந்த முத்திரை வெளியீம்டு அதற்கு பின்னால் நிற்கும் புரட்சிகர தமிழீழமாணவர்களுக்கும் எமது பாராட்டுகள்.
vvtuk.comஇணையம் கடந்த காலத்தை போலவே என்றும் உங்களுடன் நிற்கும் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.
