ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிரகா வாக்களிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன.இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என பிரதமர் மன் மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக, அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே அதிகளவு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.