அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பழமொழி. உணவு மட்டுமல்ல நீரும் கூட அளவுடன்தான் பருகவேண்டும். ஒரு மனிதன் சராசரியான ஒரு நாளைக்கு இவ்வளவு நீர் அருந்த வேண்டும் என வைத்திய ரீதியாக ஒரு அளவு இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக உள்ளார் ஒரு பெண். இவரைப்பற்றி வினோதமான செய்தியே இன்று.
லண்டனைச்சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் கென்னடி என்கின்ற பெண். இவர் சிறுவயதில் இருந்தே அதிகளவு தண்ணீர் குடிப்பது வழக்கம். இதுவே நாளடைவில் தண்ணீருக்கு அடிமையாக மாற்றிவிட்டது. இதன் பிரதிபலன் இன்று இப்பெண் நாளொன்றுக்கு 6 கலன்கள் கொண்ட நீரை அருந்துகிறார். இவருக்கு தற்போது 26 வயதாகறது.







