ஹக் பண்ணப்பட்ட இலங்கை ஊடக இணையப் பக்கமான www.media.gov.lk இல்,
அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்து அல்லது எமது தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க தயாராகுங்கள் எனவும் நாங்கள் பாகிஸ்தானியர்கள் எங்கள் அனைவருக்கும் நீதி வேண்டும், எங்கும் நீதிவேண்டும் என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு அவுஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சியில் வெளிவந்திருந்த சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விபரண காணொளித் தொகுப்பு ஒன்றினையும் இணைத்துள்ளது.
ஏற்கனவே சிறிலங்கா அரசின் 50க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மீதான இவ்வகை ஊடறுப்புக்களினால் திகைத்துப்போயுள்ள சிங்கள அரசுக்கு இன்றைய இந்த ஊடறுப்பு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் பாலசந்திரன் மீதான சிங்கள இராணுவத்தினரது படுகொலைக் காட்சிப்பதிவுகள் இலங்கையின் போர்குற்றங்கள் சாட்சிப்பதிவுகளாக சர்வதேசத்தின் கவனத்தினை பெற்றுள்ள நிலையில், ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளான இணையப் பக்கத்தில் போர்குற்றங்கள் தொடர்பிலான காணொளிகள் வெளிவந்துள்ளமை சிங்கள அரசை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாறான மர்ம நபர்கள் இலங்கையின் 1962 இணையளத்தளங்களை இது வரையில் ஊடுருவியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதில் பல வர்த்தக நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் அரச உத்தியோக இணையத்தளங்களும் அடங்குகின்றன.