இன்று அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட எல்லே போட்டியில், ஆண்கள் ,பெண்கள் என இருபிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.
பெண்கள் பிரிவில், முதலாவது அரையிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து , பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகம் மோதியது .இதில் சென்தோமஸ் விளையாட்டுக்கழகம் 3:2 என்ற புள்ளி கணக்கில் வெற்றியீட்டியது.
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில், வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து, வல்வை கழுகுகள் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ் ஆட்டத்தில் கழுகுகள் விளையாட்டக்கழகம் 2:1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியீட்டியது .இறுதியாட்டத்தில் சென்தோமஸ் விளையாட்டுக்கழகம் 2;1 என்ற புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றது.