எகிப்து பலுன் விபத்தில் 19 பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பயணிகள் பலி: 8 சடலங்கள் மீட்பு

எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள லக்ஸர் நகரத்தின் அருகே வெப்பக் காற்று பலுனில் பயணித்த 19 சுற்றுலா பயணிகள் பலியாகினர்.

இவர்களில் சிலர் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் ஆவர். நைல் நதிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள லக்ஸர் நகரமானது சிதைந்து போன புராதண எகிப்து அரசர்கள் வாழ்ந்த இடமாகும். இது மிகவும் பிரமலமான சுற்றுலாத் தலமாகும்.

இங்கிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் இந்த பலூன் பறந்த போது கேஸ் வெடித்துள்ளது. இதில் பயணித்த 20 பேரில் 19 பேர் மரணமடைந்தனர். ஒரு பயணியும், பலுனை இயக்கிய நபரும் தப்பித்தனர்.

மரணமடைந்தவர்களில் இதுவரை 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.