மறைந்த நேதாஜி உறுப்பினர் கட்டியப்பா ஞாபகார்த்தமாக நேதாஜி விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர்கள் 10 பந்துப்பரிமாற்றங்களை மென்பந்தாட்ட தொடர்.
play off போட்டி 01:
சைனிங்ஸ் எதிர் றெயின்போ
முதலில் ஆடிய சைனிங்ஸ் அணி 59 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.சைனிங்ஸ் சார்பாக பார்த்தீபன் (சிம்பு)21 ஓட்டங்களை பெற்றார்.
வெற்றி இலக்கை நோக்கி ஆடிய றெயின்போ அணி 5 வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
play off போட்டி 02:
தீருவில் எதிர் நேதாஜி
முதலில் ஆடிய நேதாஜி அணி 78 ஓட்டங்களை பெற்றது
வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தீருவில் அணி 71 ஓட்டங்களை பெற்றது.
நேதாஜி அணி 7 ஓட்டங்களால் வெற்றி.
Play offபோட்டி 03 :
சைனிங்ஸ் எதிர் நேதாஜி
முதலில் ஆடிய நேதாஜி அணி அதிரடியான ஆட்டம் மூலம் 94 ஓட்டங்களை பெற்றது .பிரகதீஸ் 59 ஓட்டங்களை பெற்றார் சைனிங்ஸ் சார்பாக மேனகாந் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .
வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சைனிங்ஸ் அணி துடுப்பாட்ட வரிசையின் சிறப்பான அதிரடி ஆட்டம் மூலம் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்த்தீபன்(சிம்பு) 42 ஓட்டங்களை பெற்றார்.
சைனிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி.
.