கட்டியப்பா ஞாபகார்த்த மென்பந்தாட்ட தொடர்-றெயின்போ அணி சம்பியன்.

கட்டியப்பா ஞாபகார்த்த மென்பந்தாட்ட தொடர்-றெயின்போ அணி சம்பியன்.

றெயின்போ அணி சம்பியன்.
சைனிங்ஸ் அணி 2 ம் இடம்.

வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகமானது அமரர் கட்டியப்பா ஞாபகார்த்தமாக அணிக்கு 11 பேர் 10 ஓவர் கொண்ட மென்பாந்தாட்ட தொடரொன்றை கடந்த ஒரு வாரமாக நடாத்தி வந்தது..

அந்தவகையில் இன்றைய தினம் காலையிலே பிளே ஓவ் சுற்று ஆட்டங்கள் இடம்பெற்றது..அவ்வாட்டங்களில் வெற்றியீட்டி சைனிங்ஸ் மற்றும் றெயின்போ அணிகள் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றன..

இன்றைய தினம் மாலை (26/06/2017 )இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய றெயின்போ அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது….அந்த வகையில் துடுப்பெடுத்தாடிய றெயின்போ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ஓட்டங்களை பெற்றது.. அவ்வணிசார்பாக அதிகபட்சமாக ஜெகன் 45 ,ருதேஷா 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.. இதனைத்தொடர்ந்து 99 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சைனிங்ஸ் அணியானது 10 ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 49 ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியது.. அவ்வணிசார்பாக ரவி அதிகபட்சமாக 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்…பந்துவீச்சில் றெயின்போ அணிசார்பாக ஜெகன் மற்றும் கபிலன் 2 விக்கெட்டுக்களையும் ,ருதேஷா மற்றும் சுதா 1விக்கெட்டெயும் கைப்பற்றினர் 

Leave a Reply

Your email address will not be published.