பயனர்களுக்கு அதிரடிச்சலுகை ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது பேஸ்புக்

சமூக வலைத்தளங்கள் மத்தியில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு கொடிகட்டிப்பறக்கும் பேஸ்புக் வலைத்தளமானது தற்போது புதிய சலுகை ஒன்றினை தனது பயனர்களுக்கு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதாவது 14 வெவ்வேறு நாடுகளில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் 18 நிறுவனங்களுடன் பேஸ்புக் தளம் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதுடன், குறித்த தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தும் தனது பயனர்களுக்கு முற்றிலும் இலவசமான முறையில் அல்லது சலுகை முறையில் பேஸ்புக் மெசஞ்சரினை பயன்படுத்தும் வசதியை அளிக்கவுள்ளது.

எனினும் இவ்வசதியினை Android மற்றும் iOS சாதனங்களினூடாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.