சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் பேசும்போது, இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக அன்றே குரல் கொடுத்தவர் பால் தாக்கரே. இலங்கை தமிழர் விவகாரத்தை தமிழக பிரச்சனையாக பார்க்க கூடாது. தேசிய விவகாரமாக கருத வேண்டும். 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக கண்டன குரல்கள் எழுப்பாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இலங்கையில் இந்து கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதும் அதற்கு இந்திய அரசு மவுனம் சாதித்து வருவதும் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே. ரங்கராஜன் பேசும்போது, அண்டை நாடான இலங்கையில் நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வெதேச விசாரணை ந்டத்த வேண்டும்.அரசியல் தீர்வு காண தூதரகம் ரீதியாக இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு குறித்து அறிவிக்க வேண்டும். இலங்கை போர்க்குற்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்து மக்கள் கண்ணீர் விட்டனர் என்று கூறினார்.













Leave a Reply