இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அந்நாட்டு அரசு நம்பத்தகுந்த மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தவிலை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக நீண்ட காலமாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரல் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்ற நாடுகளை கவலையடை செய்வதாகவும்அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. சபையில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை மிகவும் வலுவானதாக இருக்கும் என்றும் பேட்ரிக் வென்ட்ரல் தெரிவித்துள்ளார்.