பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட ஜந்து Over களை கொண்ட மென்பந்தாட்ட தொடர் இன்று காலை வல்வை நெற்கொழு மைதானத்தில் நடைபெற்றது . இந்த சுற்றுப்போட்டியில் பதினான்கு கழகங்கள் பங்கு பற்றின .
இறுதிப்போட்டியில் வல்வை கழுகுகள் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகம் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தொண்டமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் ஜந்து Over நிறைவில் 27ஓட்டங்களை எடுத்தது. 28 ஓட்டங்களை எடுத்தால் வெற்றியெனும் இலக்குடன் களம் புகுந்த கழுகுகள் விளையாட்டுக்கழகம் நான்கு விக்கெட்களை இழந்து 28 ஓட்டங்களை பெற்று 2013ம் ஆண்டிற்கான மென்பந்தாட்ட தொடரில் சம்பியனானது.
வல்வை விளையாட்டுக்கழகம் மற்றும் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் இச் சுற்றுத்தொடரில் காலிறுதிவரை முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.