இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை 07.07.2017 மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவருக்கே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவரது இருதயம் சுமார் 12 வீதம் செயலிழந்திருந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்திருந்த 24 வயதான இளைஞன் ஒருவருடைய இருதயம் குறித்த பெண்ணிற்கு பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களும் வேறு இரண்டு நோயாளர்களுக்கு மாற்றறுவை சிகிச்சைமூலம் பொருத்தப்பட்டுள்ளன.
இவர்கள் மூவரும் நலமாக உள்ளதாக கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளரை மேற்கோள்காட்டி சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.