Search

வல்வை இலங்கை வங்கி S.பிரகலாதன் பிரியாவிடை நிகழ்வில் முகவரி தந்த முதல்வனின் முற்றத்தில் பிறந்தவனே

வல்வை இலங்கை வங்கியில் பணியாற்றி கிளிநொச்சி இலங்கை வங்கியில் பணியாற்ற செல்கின்ற S.பிரகலாதன் பிரியாவிடை நிகழ்வு வல்வை இலங்கை வங்கியில் நடைபெற்றுள்ளது சக பணியாளர்கள் வாழ்த்திய மடல் இது நாமும் வழ்த்துகின்றோம் வல்வையர்கள் சென்ற இடம் சிறப்பித்து வென்று வருவீர் வாழ்க உன் புகழ் வளர்க எம் வல்வை
பிரியாவிடை நிகழ்வில்
நன்றிகள் என்றென்றும்…
முகவரி தந்த முதல்வனின் முற்றத்தில் பிறந்தவனே
முகநூலில் உயிரோடு வாழ்பவனே
ஆர்ப்பரிக்கும் கடலோரம் – ஆடித்திருந்த தெருவோரம்
உன் ஊர்த்தொண்டும் பொதுத்தொண்டும் ஆகி அப்பால் சென்றாலும் மனதோடு
ஹாட்லியின் மைந்தனாய் கனவோடு சென்றாய்
கனவு மெய்ப்பட வங்கியில் நுழைந்தாய்
கட்டை வேகும் வரை மட்டையோடு திரிகிறாய்
Facebook இல் McCullum என திரிகிறாய்
கறுப்பான நீ வெள்ளையாய் சிரிக்கிறாய்
வெளியோடு பேசி உள்ளோடு சிரிக்கிறாய்
கண்ணியம் போனால் கருத்தோடு பேசி
கருவோடு அறுக்கிறாய்
வாழ்வுதனை வங்கி கவ்வும்
வழிதவறின் வாழ்வு போகும்
நேர் கொண்ட உன் பாதை – வங்கியில்
நெடுநாள் நீளும் – நீட்சி
உன் உயர்ச்சிக்கு துணை போகும்
ஓடிய ஓட்டமும் சிந்திய வியர்வையும்
உராய்வு போன உன் உந்துருளியின் ரயர்கள் சொல்லும்
GL Balance உம் NPA Figure உம்
Fire ஆன உன் வேலையில் கவர்ச்சி காட்டும்
முடியாதது எல்லாம் நாம் முயற்சிக்காதது
நீ முடித்தது எல்லாம் கடும் முயற்சியால் வந்தது
போகுமிடம் தூரம் தான் – ஆனால்
போவதும் நம் தேசம் தான்
தாயகத்தின் இதயத்தில் தமிழன்னை முத்தமிட்ட தேசத்தில் மாற்றலாகி செல்கின்றாய்
மாறும் உன் வாழ்க்கை என
தமிழ் தாயின் பெயரில் வாழ்த்துகிறேன் உன்னை
வாழ்க வளமுடன்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *