பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டுத்துறை நாடாத்தும் மாவீரர் நினைவான உதைபந்தாட்ட சுற்றுக்கிண்ணப் போட்டியில் இன்றைய இரண்டாவது போட்டியில் வல்வை புளுஸ் விளையாட்டுகழகத்தை எதிர்த்து செவரோன் விளையாட்டுகழகம் மோதியது.ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருபது நிமிடத்தில் செவரோன் வி.க ஒரு கோலையும் அதைத்தொடர்ந்து வல்வை விளையாட்டு கழக வீரரான தீபன் ஒரு கோல்களை அடித்து போட்டி சம நிலையில் நிறைவுபெற்றது.அடுத்த போட்டி எதிர்வரும் 10-03-2013 அன்று கலைநகர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து வல்வை புளுஸ் விளையாட்டு கழகம் மோதவுள்ளது.