Search

சிறீலங்காவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் பேராட்டம் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் உணர்வாளர்கள் கைது!

சென்னையில் சிறீலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ பழ நெடுமாறன் கொளத்தூர் மணி வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.பத்திற்க மேற்பட்ட தமிழ்அமைப்புக்கள் ஒன்றிணைநந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பாலச்சந்திரன் மகன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரம் வெளியாகியிருப்பது சிறீலங்கா மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இலங்கை இறுதி கட்டப் போரின் போது இன அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா படையினர் மீதும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்ச மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழர் வசிக்கும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் சிறீலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஈடுபட்டன.
இராபசபக்சே கும்பல் மீது அனைத்துலக விசாரணை தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தை மக்கள் நல்வாழ்வு இயக்கம் அழைப்பு விடுத்தது. அதன்படி நுங்கம்பாக்கம் இலயோலா கல்லுரி வாயிலிலிருந்து கருப்புக் கொடிகளுடன் முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாகப் புறப்பட்ட தோழர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது. சிங்களக் கொடியும் இனவெறியன் இராசபக்சே உருவபொம்மைகளும் தீயிட்டு கொளுத்தபட பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினருக்கும் போராட்டத் தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தி.க. தலைவர் திரு. ஆனூர் ஜெகதீசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன், உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தோழர்களும் இதில் பங்கேற்கு கைதாயினர். மக்கள் நலவாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கண.குறிஞ்சி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தி.நகர் செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன் தமிழக இளைஞர் முன்னணி சென்னை மாநகரத் தலைவர் தோழர் வினோத் செயலாளர் தோழர் கோபிநாத் தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றுக் கைதாகியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published.