அமெரிக்காவின் தீர்மானம் திருப்தி அளிக்கும் வகையில் அமையுமா என்பதில் சந்தேகம் – TNA

அமெரிக்காவின் தீர்மானம் திருப்தி அளிக்கும் வகையில் அமையுமா என்பதில் சந்தேகம் – TNA
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைப் அமர்வுகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் திருப்தி அளிக்கும் வகையில் அமையுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு தெரிவித்துள்ளது.
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த தடவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த தீர்மானத்தை விடவும் அழுத்தமான தீர்மானமொன்று இம்முறை நிறைவேற்றப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் அழுத்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவை மட்டுமே நம்பி தாம் இருக்க முடியாது எனவும், பல்வேறு நாடுகளின் தூதர்களை சந்தித்து பிரச்சினை பற்றி விளக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.