நல்லூர் பின்வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று பிற்பகல் 5 மணியளவில் நல்லூர் பின்வீதியில் நடந்து வந்த ஒருவர் திடிரென எதிரே நின்றவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதே வேளை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் காரும் பின்னால் வந்துள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சத்தத்தை கேட்டதும் நீதிபதியின் பிரித்தியோக பாதுகாப்பாளர் காரை விட்டு வெளியே வந்தபோது அவ் பொலிஸாருக்கு மார்பு மற்றும் கையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனூக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். குறித்த சந்தேக நபரால் ஒன்பது முறை துப்பாக்கி பிரயோகம்மேற்கொள்ளப்பட்து.
பின்னர் அங்கி நின்ற ஒருவருடைய மோட்டார் சைக்கிளை பறித்து வேகமாக செல் கையில் குறித்த மர்பநபர் பாவித்த கைத்துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. எனினும் கைத்துப்பாக்கியை எடுக்காமல் குறித்த சந்தேக நபர் சென்றுள்ளார்.
தற்பொழுது நல்லூரில் பொலிஸார் மற்றும் அதிரடிப்படைகுவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு இ லக்காகிய பொலிஸார் சிகிச்சைக்காக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.