சிங்கள பயங்கரவாத அரசின் இராணுவத்தின் வெறிச்செயல் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

சிங்கள பயங்கரவாத அரசின் இராணுவத்தின் வெறிச்செயல் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

தமிழகக் கடற்றொழிலாளர்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசின் கடற்படையினர் தாக்குமல் நடத்தியதாகவும், அதன்போது கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயத்திற்கு உள்ளானதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 02ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு மீண்டும் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த சமயம் நடுக்கடலில் சுற்றி வளைத்த சிங்கள பயங்கரவாத அரசின் கடற்படையினர் சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இத் தாக்குதலில் இதில் செண்பககுமார் என்பவர் காயம் அடைந்தார். வலது தோளில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கடல் பகுதியில் கோடியாக்கரையில் இருந்து 18 மைல் தூரத்தில் மீன் பிடித்து திரும்பிக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்த சிங்கள பயங்கரவாத அரசின்  கடற்படையினர் எங்களின் வலைகளை அறுத்து எறிந்ததுடன், சரமாரியாக துப்பாக்கிச் சூடும் மேற்கொண்டனர் என காயமடைந்த செண்பககுமார் குற்றஞ்சாட்டடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து  காரைக்கால் கடற்றொழிலாளர் அமைப்பினர் தமிழகக் கடலோரக் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.