இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும்

இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர் என்றாலும் இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும். யுத்த காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று எதிர் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசயிக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்திற்க எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. சாசனங்கள் சிறீலங்காவில் பாதுகாக்கப்படுவதாக எவ்வாறு கருதமுடியும் . எனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆராய்ந்து விசாரணை செய்ய விஷேட ஆணைக்குழுவின் தேவை காணப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் செய்ய விஷேட ஆணைக்குழுவை ஐ.தே.க அமைத்துள்ளது இந்த நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடித் தொகுதியில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிறீலங்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே கோகின்றது. இவற்றை தடுக்க உரிய வகையிலான தேசிய செயற்றிட்டம் இல்லாமையால் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான வன்முறைகள் கூட கட்டுக் கடங்காத நிலையில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. எனவே தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராயவும் விசேட ஆணைக்குழுவை அமைத்துள்ளோம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற யுத்தக் காலமும் அதற்கு பின்னரான சட்ட ஆட்சி வீழ்ச்சியுமே சாதாராண காரணமாக காணப்படுகின்றது. ஆண்களின் விளையாட்டுக் பொருட்களாக பெண்கள் நோக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். பேண்களுகட்கு எதிரான வன்முறைகளினால் பல வகையில் உரிமை மீறல்க்ள இடம்பெறுகின்றது.

சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசுகின்றோம். ஆனால் சிறீலங்காவின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக காணப்படுகின்ற பெண்களின் உரிமைகள் படுமோசமான முறையில் சிறீலங்காயில் மீறப்படு:கின்றது.

இந்நிலை தென்னிலங்கையிலேயே இந்தளவிற்கு அதிகரித்துள்ளது என்றால் வடக்கின் நிலை சொல்லவே தேவையில்லை.

கடந்த யுத்தக் காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக கடும் மோசமான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.  விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர் என்றாலும் இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. சாசனங்கள் சிறீலங்காவில் பாதுகாக்கப்படுவதாக எவ்வாறு கருதமுடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.