அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் மறைந்த தலைவர் ஒசாமா பின்லேடனின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுலைமான் அபு காயித் என்ற பெயருடைய இவர், ஒசாமாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இவர் கைது செய்யப்பட்டு, அமெரிக்கா கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த கைது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல் என்றும் அவரை நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.