மாமிச உணவு அஹிம்சைக்கு விரோதமாகும். காய்கறி உணவு அஹிம்சைக்கு ஏற்றதாகும். யோக வாழ்க்கையைக் கைக்கொள்ளுபவனுக்கு சைவ உணவு தான் நன்மை பயக்கும். மீன், முட்டை, மாமிச உணவினால் ஒருவனுக்குக் கிடைக்கும் உடல் சத்து, காய்கறி உண வினாலும் அதே அளவுக்குக் கிடைக் கும். இது விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து எடுத்த முடிவாகும்.
1985 -இல் நோபல் பரிசு பெற்ற இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகளான டாக்டர். மைகேல் எஸ்.பிரௌன் மற்றும் டாக்டர் ஜோஸப் எல்.கோலட் ஸ்டீன், ரத்தத்தில் குளோசெஸ்டிரால் அதிகமாவதைத் தடுக்க, இது அதிக மாகக் காணப்படும் முட்டைகள், மாமிச உணவுகளைக் கைவிட வேண்டுமெனக் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் காய்கறிகளிலும் பழங்களிலும் இந்த குளோசெஸ்டிரால் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
முட்டைகளில் வைடமின்-பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி கால்ஷியம், புரதப் பொருள்கள் காணப்படவில்லை என்றும் அவர்கள் கண்டுபிடித்துக் குறிப்பிட்டுள்ளனர்.
புள்ளி விவரங்கள் மூலம், 100 கிராம் முட்டையில் 13.3 அளவு புரதச் சத்தும், மீன்களில் 22.6 அளவும், மாமிசத்தில் 18.5 அளவும் உள்ளன என்றும், பச்சைப்பயறில் 24.0 அளவும், சோயா பருப்புகளில் 43.2 அளவும், நிலக்கடலையில் 31.9 அளவும் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சைவ உணவு எவ்வளவு பயனுள்ளது என்பதை நாம் காணலாம்.
சாத்வீக உணவினால் மனம் சாத்வீகம் அடைகிறது என்பது யோகத் தத்துவமாகும். குடி, போதைப் பொருளைச் சாப்பிடுவது, புகை பிடித்தல் முதலியவை மூளையையும், இதயத்தையும் மிகவும் பாதிப்பவை என்பதை மருத்துவர்கள் நன்கு விவரித்துள்ளனர். சுவாச உறுப்புகளும் அதிகம் பாதிக்கப்படு கின்றன.
ஆக, யோகம், தியானம் பயிலும் அனைவரும் காய்கறி சேர்ந்த சைவ உணவுகளையும், பப்பாளி, வாழைப் பழம் முதலிய பழங்களையும், இளநீர் போன்ற திரவங்களையும் தவறாமல் சாப்பிட்டு வருவது மிகவும் அவசியமாகும். உடல் ஆரோக்கியமே மன ஆரோக்கியத்துக்கும், யோக சாதனைகளுக்கும் மிக அவசியமாகும்.