மறைந்த வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசின் உடலை பதப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜனாதிபதி சாவேஸ், தென் அமெரிக்காவில் பிரபலமான தலைவராக இருந்தார். இன்று இவரது உடல், தலைநகர் காரகாசில் அடக்கம் செய்யப்படுகிற போது இறுதி சடங்கில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சாவேஸ், சிகிச்சைக்காக கியூபா சென்றதால் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவில்லை. துணை ஜனாதிபதியான நிகோலஸ் மடுரோ நாட்டின் ஆட்சி பொறுப்புகளை கவனித்து வந்தார். இந்நிலையில் சாவேஸ் மரணத்தையடுத்து தற்காலிக ஜனாதிபதியாக மடூரோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பேருந்து ஓட்டுனரான மடூரோ புட்டபர்த்தி சாய்பாபா மீது பக்தி கொண்டவர். கடந்த 2005ம் ஆண்டு தன் மனைவியுடன் வந்து சாய்பாபாவை தரிசனம் செய்துவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
இந்நிலையில் மறைந்த ஜனாதிபதி சாவேசின் உடல் ஒரு வாரத்திற்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுமென்றும் பின்னர் உடலை பதப்படுத்தி நாட்டின் அருங்காட்சியத்திற்கு கொடுக்கப்படுமெனவும் துணை ஜனாதிபதி நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.