யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி

யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி

யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது தொடரப்பட்டு வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக இன்று யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உ. ஸ்ராலின் (வயது24) என்ற இளம் பத்திரிகையாளரே தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது குறித்த பத்திரிகையாளர் யாழ்.நீராவியடி வீதி வழியாக அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்துள்ளார்.

இதன்போது வீதிதியில் நின்று வழிமறித்த 6பேர் கொண்ட குழு கடுமையாக தாக்கியுள்ள து. மேலும் அருகில் கட்டிடவேலையில் நின்றிருந்தவர்களிடமிருந்து மண்வெட்டியொன்றையும் எடுத்து மண்வெட்டியாலும் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த பத்திரிகையளார் யாழ்.பல்கலைக்கழத்தில் அசம்பாவிதம் இடம்பெறும் போதும் இராணுவத்தினரால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று இவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடுமையான உள்காயங்களுக்குள்ளாகி, மூச்சுத்திறணல் ஏற்பட்டு வீதியில் கிடந்த நிலையில் வீதியால் வந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இவரைத் தாக்கியவர்களிடம் தன்னுடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையினை காண்பித்திருக்கின்றார். அதற்கு தாங்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக் கொண்டே தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரான இவர் 2007 காலப்பகுதியில் சென்யோன்ஸ் கல்லூரிஇ யாழ் இந்துக் கல்லூரிஇ கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது கைதாகி விடுதலையானவர்.

அண்மைய நாட்களாக இனம்தெரியாதவர்கள் கடுமையான அழுத்தங்களை கொடுத்ததாக ஏற்கனவே யாழ் ஊடக அமைப்புகளிடம் இவர் முறையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலம்புரி ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீராவியடி என்னும் பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத கும்பலொன்று ஊடகவியலாளரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த குறித்த ஊடகவியலாளர் தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

Leave a Reply

Your email address will not be published.