பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடர் இன்று திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆண்கள் பெண்களுகான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகம் மோதியது . இந்த ஆட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகம் ( 2: 1 )என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது. வல்வை பெண்கள் அணியினர் அரை இறுதியாட்டத்தில் வல்வை கழுகுகள் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் தண்ட உதைமூலம் வெற்றியீட்டியது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் அரையிறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்தோமஸ்விளையாட்டுக்கழகம் (4 : 0 ) என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.
ஆண்களுக்கான முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது . இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் ( 1: 0 ) என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி, அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
அடுத்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் ( 1: 0 ) என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி, அரையிறுதியாட்டத்திற்கு தெரிவானது, அரை இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழகம் மோதியது.
இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் ( 2: 0 ) என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி , இறுதிப்போட்டிக்கு தெரிவானது. இப்போட்டியானது, அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. பல வருடங்களின் பின் வல்வை விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கு குறிப்பிடத்தக்கது.