ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க ராணுவ மந்திரி சாக் ஹாகெல் சென்ற நேரத்தில் தலீபான்கள் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 பேர் செத்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க ராணுவ மந்திரி சாக் ஹாகெல் சென்ற நேரத்தில் தலீபான்கள் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 பேர் செத்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க ராணுவ மந்திரி சாக் ஹாகெல் சென்ற நேரத்தில் தலீபான்கள் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 பேர் செத்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராணுவ மந்திரி திடீர் பயணம்

அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ள சாக் ஹாகெல் முன் அறிவிப்பு ஏதுமின்றி, நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு திடீரென்று சென்றார். அங்குள்ள நேட்டோ படை முகாம்களுக்கு போய் ஆலோசனை நடத்தவும், ஜனாதிபதி கர்சாயை சந்தித்து பேசவும் அவர் திட்டமிட்டு இருந்தார்.

அதன்படி நேற்று காலை அவர் தலைநகர் காபூல் நகருக்கு அருகேயுள்ள அமெரிக்கப்படை முகாமுக்கு சென்றார்.

தலீபான்கள் தாக்குதல்

இந்நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலீபான் தீவிரவாதிகள் நேற்று 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார்கள். காலை சுமார் 9 மணி அளவில் காபூலில் உள்ள ராணுவ அமைச்ச கட்டிடம் நுழைவு வாயில் பகுதியில் குண்டுகளை வெடித்தனர். சைக்கிளில் வந்து தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தினான்.

இந்த தாக்குதல் நடந்த ½ மணி நேரத்தில் கோஸ்ட் என்ற நகரிலுள்ள போலீஸ் சோதனை மீது தற்கொலை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான்.

18 பேர் சாவு

காபூல் தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் செத்தனர். மேலும் 2 ராணுவ வீரர்கள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். கோஸ்ட் நகரில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உள்பட 9 பேர் இறந்தனர். இதில் பலர் குழந்தைகள் என அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க மந்திரி நேற்று முன்தினம் காபூல் போய் சேர்ந்த அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் கிழக்குப்பகுதியிலுள்ள அமெரிக்க ராணுவ முகாமுக்குள் ஒரு வாகனத்தில் ராணுவ உடை அணிந்த 3 பேர் வேகமாக சென்று துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு காண்டிராக்டர் செத்தார். அமெரிக்க வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

பலத்த பாதுகாப்புடன் ஆலோசனை

இந்த குண்டு வெடிப்புகள் நேற்று நடைபெற்ற நேரத்தில் மந்திரி சாக் ஹாகெல் காபூல் நகரின் மற்றொரு பகுதியில் அமைந்திருக்கும் ராணுவ முகாமில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். குண்டு வெடிப்பின் சத்தம் அங்கும் கேட்டது. அதை அடுத்து கட்டிடம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அவர் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக பென்டகன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு தலீபான் இயக்கம் பொறுப்பு ஏற்றது. இது தொடர்பாக தலீபான் செய்தி தொடர்பாளர் சபிபுல்லா முஜாகித் வெளியிட்ட தகவலில், ‘இது அமெரிக்க ராணுவ மந்திரிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.