சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் அரசை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருவது தீவிரமடைந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை(6.3.2013) சிரியாவிற்கு சென்ற ஐ.நா அமைதிக் குழுவைச் சேர்ந்த 30 பேரில் 21 பேர் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதைத் தொடர்ந்து சிரிய ஜனாதிபதி பஷார் அசாத்துக்கு உலகளவில் கிடைத்த எதிர்மறை விளம்பரத்தால், பணயக் கைதிகள் 21 பேரையும் கிளர்ச்சியாளர்கள் நேற்று விடுவித்தனர். அவர்கள் அனைவரும் நேற்று மதியம் சிரியாவிலிருந்து ஜோர்டான் நாட்டுக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.