பிரான்சில் ஈழத்தமிழர் விளையாட்டுத்துறை நாடாத்தும் மாவீரர் நினைவான உதைபந்தாட்ட சுற்றுக்கிண்ணப் போட்டியில் இன்றைய (10-03-2013) போட்டியில் வல்வை புளுஸ் விளையாட்டுகழகத்தை எதிர்த்து கலைநகர் விளையாட்டுகழகம் மோதியது.ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டு பதின்மூன்றாவது நிமிடத்தில் வல்வை புளுஸ் வி.க வீரர் ஜெரிக் அவர்கள் ஒரு கோலையும் அதைத்தொடர்ந்து வல்வை விளையாட்டு கழக வீரரான பிரபு முப்பத்திநான்காவது நிமிடத்தில் ஒரு கோலையும் அதனைத் தொடர்ந்து விறு விறுப்பாக போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது நாற்பந்தைந்தாவது நிமிடத்தில் இடைவேளை தரப்பட்டது.அதைத் தொடர்ந்து வல்வை வி.க வீரர் தீபன் ஒரு கோலையும் அடித்தார்.பின்னர் போட்டி முடிவுக்கு வந்தது.3 க்கு 0 என்ற கோல் கணக்கில் வல்வை புளுஸ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.இவ் ஆட்டங்கள் அனைத்தும் 1 மணி 30 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.