செய்திகள்

திருச்சியில் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்த மாணவர்கள் – அதிர்ச்சியில் ஜெ.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை கண்டித்தும், போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்திய லயோலாக் கல்லூரி மாணவர்களை தமிழகத்தின் ஆளும்வர்க்கம் கைது செய்தது. இச் செயற்பாட்டால் மாணவர்களை அடக்கிவிடலாம் என நினைத்த ஜெயாவின் அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர் திருச்சி மாணவர்கள்.

லயோலக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அதே 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக 10 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 100க் கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புாக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதமிருக்கும் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே.

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித் தமிழீழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்.

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *