Search

நேதாஜி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேதாஜி விளையாட்டு கழக வெற்றி பெற்றது

வல்வை நேதாஜி விளையாட்டு கழக 53 வது வருட நிறைவு ஆண்டுவிழாவினை முன்னிட்டு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்களுக்கிடையே நடாத்திய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றுள்ளது

இன்று வல்வை நேதாஜி விளையாட்டுக்கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமாகியது முதல் போட்டியாக நேதாஜி வி.க எதிர் ரேவடி மோதியது

நேதாஜி வி.க வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியது

இரண்டாவது சுற்றில் சைனிங்ஸ் எதிர் உதயசூரியன் மோதி சைனிங்ஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது இறுதி போட்டியில் நேதாஜி எதிர் சைனிங்ஸ் மோதி நேதாஜி வி.க  வெற்றி பெற்றது




Leave a Reply

Your email address will not be published.