தமிழ்த்தேச அமைப்புகளே,மக்களே ,மாணவர்களே.. மாணவர்களின் போராட்டாத்திற்கு வலிமை சேர்ப்போம்.

மற்றெதனையும் விட சூழ்ந்து பற்றி வெடிக்கும்  மாணவர்களின் போராட்டம்  வலிமையானதுதான்!
மாணவர்களின் எழுச்சி உலகின் பல்வேறு மாற்றத்தை  நிகழ்த்தி இருப்பதும்  உண்மைமைதான்!
முத்துக்குமார் விடுதலை நெருப்பை மாணவர் கையில்  கொடுத்துச் சென்றதும்  அதனால் தான்!
தமிழகத்தின் பல்வேறு காலத்தின் இக்கட்டில்  பேராற்றலாய் மாணவர்கள் ஓங்கி உயர்ந்து  ஆணவ ஆதிக்கக் கொடூரங்களை  உறைய வைத்ததும்  உண்டுதான்!
மாணவர்களின் அளப்பரிய திரட்சியின் எழுச்சியின்  விளைச்சலை, இந்தியம் நக்கிப் பிழைக்கும்  இரண்டக ஈனர்கள் அரவமற்று அறுவடை செய்து  ஏப்பம் விட்ட ஏய்ப்புகளும் ஏமாற்றங்களும் தமிழகம்  சந்தித்தது தான்!
ஆர்ப்பாட்டையும் கூப்பாட்டையும் உண்ணாமையையும்  ஊனமாகவே, நகைப்பாகவே, இழிவாகவே  பார்த்து பழகிவிட்டத்து ஈன இந்தியம்.
இருக்கட்டும் இருக்கட்டும்
ஆயினும்  தமிழ்த்தேச அமைப்புகளே,மக்களே ,மாணவர்களே..  மாணவர்களின் போராட்டாத்திற்கு  வலிமை சேர்ப்போம்.
வெகுவாய்  விரைவாய்  நம்  போராட்ட முறைகளை மாற்றுவோம்!
தமிழ்த்தேச விடியலுக்கு  புரட்சி செய்வோம்.









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *