வல்வையில் முதல் முறையாக நேதாஜி விளையாட்டுக்கழகம் நடாத்திய கடற்கரை கரப்பந்தாட்டம் ,இது இருவர் கொண்ட சுற்றுப்போட்டி, இதில் வல்வைக்கு உட்பட்ட கழகங்களில் இருந்து 12 அணிகள் பங்குபற்றின .விலகல் முறையில் அமைந்த இப்போட்டியில், வல்வை உதயசூரியன் கழகமும்,வல்வை நேதாஜி கழகமும் இறுதிப்போட்டியில் பங்குபற்றின.இதில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகதை 2:0என முதலிடத்தை கைப்பற்றின. இந்தச் சுற்றுப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வல்வை ரேவடி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த இளம் வீரர் சீலனுக்கு வழங்கப்பட்டது .போட்டிகள் நல்லிரவைத்தாண்டி முடிவடைந்தன