அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின் அதிசய உணவகம் !!

அந்தரத்தில் அமைந்திருக்கும் சீனாவின் அதிசய உணவகம் !!

புதுமை விரும்பிகள் சீனாவில் ஏராளம்.. இவர்களுக்காகவே அனைத்து பொருட்களும் புதுமையாகவே உருவாக்கம் பெறுகின்றன.

சீனாவின் Hubei மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் “Fangweng Restaurant” என்று சொல்லப்படுகின்ற உணவகமொன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் சிறப்பியல்பு என்னவென்றால் பெரும்பகுதி மலையில் அந்தரத்திலே அமைக்கப்பட்டுள்ளது, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தால் பலநூறு அடி உயரமான மலையின் அடிப்பகுதி தெரியும் !!

 

இதன் நுழைவுப்பகுதியும் மிகவும் தில்லானது … மலையின் செங்குத்தான மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள வாசல் மூலமாகவே உள்ளே நுழைய வேண்டும், (படங்களைப் பார்க்கவும்)

 

1127-1279 காலப்பகுதியில் மலைவாழ் மக்களின் இருப்பிடமாக இருந்த இப்பகுதி பின்னாளில் சில திருத்தவேலைகளுடன் உணவகமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





Leave a Reply

Your email address will not be published.