கடல் கொண்ட நீரை
கவர வந்த கள்வன்
கரு கொண்ட மேகம்
பெரு மேகம் தங்கள்
பேதைமை மறந்து இணைந்து
பெய்வது தான் பெருமழை
மேகத்துடன் மேகம் இணைந்து
மேலான ஒற்றுமை கொண்டதால்
மேதினி பெறுவது தான் மழை
சிறு சிறு துளிகள் எல்லாம்
சிதறாமல் சேர்வது தான்
சினம் கொண்ட பெரு வெள்ளம்
வரும் வெள்ளம் கண்டால்
வழி எல்லாம் உள்ள
வனமெல்லாம் என்னாகும்
எல்லாமே எதனால் சாத்தியமாயிற்று
ஏதமில் ஒற்றுமை தான்
என்பதை உணரு தமிழா
ஒற்றுமை ஒன்று இருந்தால்
ஒன்றாய் நாங்கள் நின்றால்
ஓர் நாடென்ன ஒருலகமைகலாம்
நாட்டில் ஒன்றாய் இருந்தோம்
நாலாய் பிரிந்தோம் – நாய்கள்
நம்மில் நஞ்சை கலந்தன
நீயா நானா எனும்
நீதியிலாப் பேதைமை கொண்டோம்
நிறையவே அமைப்புகள் ஆனோம்
ஆகிய எம் பிரிவுகளாலே
அரசியலிலும் அகதிகள் ஆனோம்
அதிசயந்தானோ இதுவும் அசிங்கம் தான்
நீர்த்துளிகள் அவற்றுள் ஒற்றுமையாலே
நிலையான வனமழிக்க முடியுமானால்
நினைத்துப்பார் தமிழா உன்னால்
ஒன்றாகு தமிழா உனக்குள்
ஒற்றுமையாய் சேர் நன்றே
ஒரு நாடு செய்யலாம் இன்றே
வல்வையூரான்