அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது.
இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
சமீபத்தில் இந்த விண்கலம் பாறைகளை துளையிட்டு உள்ளிருந்த பொருட்களை ஆய்வு செய்துள்ளது. அதில் பாறைக்குள் களிமண் வடிவில் தாது பொருட்கள் இருந்தது.
இதுதொடர்பாக கியூரியாசிட்டி கட்டுப்பாடு தலைமை அதிகாரி ஜான்கார்ட்சிவ்ஸ் கூறியதாவது: களிமண் இருந்தாலே அங்கு தண்ணீர் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எனவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செய்த பாறைகள் பலநூறுகோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாகும். அந்த பாறை இடையே களிமண் இருக்கிறது என்றால் நிச்சயம் தண்ணீரும் இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.
தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் சிக்கி இருப்பதால் அங்கு மனிதர்கள் குடியேற வாய்ப்பு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.