தனித்தமழீழ வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் இனப்படுகொலை செய்த சிங்கள அரசினை கண்டித்தும் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தொடராக வெடித்துக்கொண்டிருக்கின்றது தஞ்சையில் தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு கோரியும் சிங்கள இன கொலையாளிகளை குற்றவாலி கூண்டில் ஏற்றக் கோரியும் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற்றது.
காலை 9 மணியளவில் தஞ்சை சரபோசி கல்லூரி வாயிலின் கதவை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர் அங்கு 300க்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டநிலையில் மருதுபாண்டியர் கல்லூரியின் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் ஊர்வளமாக வந்தனர்இ பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும்இ மாணவிகளும் அங்கு எழுச்சி முழக்கமிட்டு திரண்டனர்.
2000க்கு மேற்பட்ட மாணவர்கள் கூடிய நிலையில் தஞ்சை சரபோசி வாயிலில் மாணவர்கள் நிரம்பி வழிந்தது. அங்கு நடைபெற்ற உண்னாநிலைப் போரட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் தோழர் வழக்கறிஞர் நல்லதுரை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாணவர்களிடம் உரையாற்றினர்.
மாலை வரை உண்ணாப் போரட்டத்தில் இருந்த மாணவர்களிடம் உலகத் தமிழர்ப் பேரவைத் தலைவர் திரு பழ.நெடுமாறன் வாழ்த்தி பேசி உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
அங்கு நிறை உரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ஐ.நா.வில் கொண்டுவரும் அமெரிக்கத் தீர்மாணத்தின் கேடுகலை விளக்கியும் இந்திய அத்தீர்மாணத்தை மேலும் நீர்த்து போகச் செய்ததையும் விளக்கிப் பேசினார்.
முன்னதாக டீ.ஊழஅ மாணவர் பிரபாகரன் தலைமையில் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மாணத்தை தீயிட்டு கொளுத்தினர்.
இப்போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகர துணைச் செயலாளர் மற்றும் தமிழக இளைஞர் முன்னணி தோழர் வில்லியம்சு ஒருகிணைத்தனர்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களை வாழக்கோரும் மோசடியான அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும் தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழகம் எங்கும் எழுச்சியுடன் தொடரும் மாணவர் போராட்டங்கள்!
இன்றைக்கு தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டுள்ள மாணவர் போராட்டங்களின் ஒரு பகுதியை இது!
1. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை அடையாறில் நடத்திக் கொண்டுள்ளனர்.
2. சென்னை செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தனஞ்செழியன் சுதன் கிங்ஸ்லி பால்ராஜ் கோபி சதீஷ்குமார் ராஜா மகேஸ்வரகுமார்இ ஜான்சன் உள்பட 18 பேர் நேற்று மதியம் 1 மணி முதல் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முன்பு அமைக்கப்பட்டுள்ள சாமியான பந்தலில் அனைவரும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. பூந்தமல்லி – செங்கல்பட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் இணைத்துப் போராடி வருகின்றனர்.
3. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உளவியல் தொடர்பியல் பொருளாதாரம் வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன் ராமன் முகமதுகான் சிவா வள்ளிகண்ணு பிரசாத் பிரபாகரன் செந்தமிழ்ராஜ் என்ற மதன்ராஜ் நவீன் முத்துக்குமார்மாரியப்பன் ஆகிய 12 மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணா நிலை அறப்போராட்டத்தில் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்புக்கு: மதன்-9659410831 கார்த்திக்-9698849986 வள்ளி கண்ணன்-9597483442 ராமன்- 8675260466 சிவ ராஜா- 801235732
4. நெல்லையில் இந்திய அரசின் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) அலுவலகம் இன்று மாணவர்களால் முற்றுகையிடப்பட்டது.
5. சேலம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியத்துக்கு மேல் உண்ணாப் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது. அங்கு விடுமுறை விடப்பட்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
6. புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
7. கடலூரில் 14 மாணவர்கள் சாகும்வரை உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
8. இராமநாதபுரம் சேதுபதி கலைக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் இரண்டாம் நாளாக காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
9. கோவையில் பாரதியார் பல்கலைகழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10. கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை மதிமுக அலுவலகத்தில் சாகும்வரையிலான உண்ணாப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
11. அதிராம்பட்டினத்தில் காதர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்புக்கு: தோழர் தேவதாஸ் 9698564058
12. புதுச்சேரியில்இ டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
13. திருப்பத்தூரில் சேக்ரட் ஹார்ட் கல்லூரி மாணவாகளை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டு துணை ஆட்சியரும் அங்குள்ள நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)