சுறாமீன் தாக்குதலிலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய முதியோருக்கு வேலை பறிபோன சம்பவம்

சுறாமீன் தாக்குதலிலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய முதியோருக்கு வேலை பறிபோன சம்பவம்

கடற்கரையில் சுறாமீன் தாக்குலிலிருந்து குழந்தைகளை காப்பாற்றியவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பிரிட்டனை சேர்ந்த பால் மார்ஷல்சீயும் அவரது மனைவியும் சேவை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இரண்டு மாத விடுப்பில் இருவரும், குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள புல்காக் கடற்கரைக்கு சென்றிருந்தபோது ஆறடி நீளமுள்ள சுறாமீன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை தாக்க முற்பட்டது. இதை பார்த்த மார்ஷல்சீ, ஓடிச் சென்று சுறாமீனின் வாலைப் பிடித்து இழுத்து அதை கடலுக்குள் தள்ளினார்.

இச்சம்பவத்தை படமெடுத்த அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனம் அதை உலகமெங்கும் ஒளிபரப்பியது.

மார்ஷல்சீயின் வீரச் செயலுக்கு உலகமெங்கும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. எனினும் அவர் வேலை செய்யும் சேவை நிறுவனம் அவரையும் அவரது மனைவியையும் பணிநீக்கம் செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு எடுத்து விட்டு சுற்றுலா சென்றதற்காக நீங்கள் வேலை நீக்கம் செய்யப்படுகிறீர்கள் என கடிதத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மார்ஷல்சீ, இந்த வயதுக்கு மேல் எப்படி வேறு வேலை தேடுவது என்ற குழப்பத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.