வல்வை விளையாட்டுக்கழக ஆண்,பெண் கபடி வீரர்கள் 3ம் இடத்தை பெற்றுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் 2013க்கான பிரதான விளையாட்டுக்களில் ஒன்றான தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு கபடி போட்டி 12.03.2013 மாலை 4.30 பி.ப அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன.ஆண்களுக்கான அறையிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்துடன் மோதினர்.இப்போட்டியில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று, இறுதிப்போட்டியில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதினர்.மிகவும் கடினமாக நடந்த இறுதிப்போட்டியில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றுள்ளனர்.பெண்களுக்கான போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம்,கழுகு விளையாட்டுக்கழகத்துடன் மோதி, கழுகு விளையாட்டுக்கழகம் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதினர். இப்போட்டியில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகம் 1ம் இடத்தை தனதாக்கிகொண்டது. இப்போட்டிகள் யாவும் 6.20 பி.ப மணியளவில் நிறைவுபெற்றது.
