பாலச்சந்திரனை விட இளவயது சிறுவன் கொலை !

பாலச்சந்திரனை விட இளவயது சிறுவன் கொலை !

இறுதிக்கட்டப் போரில், இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்களை இராணுவம் எவ்வாறு கொன்றது ? திடுக்கிடும் புது ஆதாரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. லண்டன் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இக் காணொளி வெளியிடப்படவுள்ளது. இக் காணொளியை உலகத் தமிழர் பேரவை GTF பெற்று ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்தியாவில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி இதனை பிரத்தியேகமாக வெளியிடவுள்ள நிலையில், அதிர்வு இணையம் இதனை ஐரோப்பாவில் ஒளிபரப்புச் செய்ய உள்ளது.

தேசிய தலைவர் மகன், சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் கொலைசெய்தது. இப் புகைப்படங்கள் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது யாவரும் அறிந்ததே. பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்தது அந்தக் காணொளி. இருப்பினும் இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகள்(சுப்பிரமணிய சுவாமி), இராணுவம் பிரபாகரன் அவர்களின் மகனைத் தானே சுட்டார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள். ஆனால் இங்கே நீங்கள் காணவிருக்கும் வீடியோவானது, பாலச்சந்திரனைக் காட்டிலும் வயதில் சிறிய சிறுவன் ஒருவரை இலங்கை இராணுவம் கொன்றுள்ளதாகும்.

இந்த வீடியோ இன்னும் சில மணி நேரங்களில்லண்டன் நேரப்படி மதியம்(12.30) வெளியிடப்படவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.