செய்திகள்

தமிழீழ விடுதலையை அறிவிக்க பொதுவாக்கெடுப்பு கோரி, மார்ச் 17 மாலை 4 மணியளவில் சென்னை மெரீனாவில் கண்ணகி சிலையருகே கூடுவோம்.-மே பதினேழு இயக்கம்.

உணர்வாளர்களே தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பு கோரிக்கையை முன்நகர்த்துவோம். பெரும் திரளாய் ஒன்று கூடி விடுதலை கோரிக்கையை சென்னை அதிர முழங்குவோம். மாணவர்கள் தனியே இல்லை, நாமும் உயர்த்திப்பிடிப்போம் பதாகையை… செய்தியை பரப்புங்கள்… நண்பர்களை அழையுங்கள்.. ஒன்று கூடுவோம்…. இந்திய ஏகாதிபத்தியம் அதிர்ச்சியில் உறையட்டும்… தமிழர் முழக்கம் வெல்லட்டும். தமிழர்களின் ஒரே கோரிக்கை “ தமிழீழ விடுதலை”..
  • கொலைகாரனே கொலையை விசாரித்துக்கொள்ள சொல்லும் அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம் என்பதை உணர்த்துவோம்.
  • ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று சொல்பவர்கள் அனைவரும் துரோகிகள் என்று முழங்குவோம்.
  • தனித் தமிழீழம் ஒன்றே தீர்வென்று கூறுவோம்.
  • பொதுவாக்கெடுப்பையும், சர்வதேச விசாரணையையும் தவிர்த்த எதையும் ஏற்க மறுப்போம்.
நமது உறவுகளின் விடுதலைக் கோரிக்கையைக் காப்பாற்ற உங்களின் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி விட்டு வாருங்கள்.. ஆயிரமாயிரமாய் திரள்வோம்.
தொடர்புக்கு-9600781111,9443486286

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *