தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்குலக நாடுகளின் அரசியலில் தாக்கம் செலுத்தி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் தேர்தல் அரசியலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு செல்வாக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கனடா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இந்த நிலைமை நீடித்து வருதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே குறித்த நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் பிரச்சார மற்றும் ஏனைய வழிகளில் தொடர்ந்தும் சில நாடுகளில் வலுவாக இயங்கி வருகின்றார்கள் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தருணத்தில் அனைத்து தரப்பினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுடியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ள போதிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சிலர் நாட்டுக்கு எதிராக போலிப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக நாட்டுக்குள் பிரவேசிக்காத பலர் தற்போது நாட்டுக்கு வருவதாகவும், சிலர் இங்கேயே தங்கிவிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.