ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சுயாதீனமானதும், நியாயமானதும் நம்பகமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டால் இந்தியா அதற்கு ஆதரவளிக்கும் என இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய வகையிலான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.