லண்டனில் “கறுப்பு மரணத்தின்” எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு(வீடியோ இணைப்பு)

லண்டனில் “கறுப்பு மரணத்தின்” எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு(வீடியோ இணைப்பு)

லண்டனில் கி.பி 1348ம் ஆண்டில் மட்டும் 1,50,000 பேர் பிளேக் நோயால் உயிரிழந்தமையால் இவர்களது இறப்பு கறுப்பு மரணம் என கூறப்படுகிறது.

இவர்களில் 50,000 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று அகழ்வியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் எலும்புக் கூடுகள்(12) சில சார்ட்டர் ஹவுஸ் சதுக்கத்தின் கீழே தோண்டும் போது கண்டறியப்பட்டது.

இனி இந்த எலும்புக்கூடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு இவை பிளேக் நோயினால் இறந்தவர்களின் உடல்கள்தான் என்பது உறுதிசெய்யப்படும்.

மேலும் இவற்றின் பழமையும் கண்டுபிடிக்கப்படும் இவை இருந்த புதைகுழியின் ஆழம், புதைகலம்(Pottery) போன்றவையும் ஆராயப்படும். இதுபோல கடந்த 1980ம் ஆண்டில் ஸ்மித்ஃபீல்டு என்ற இடத்தில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது.

1346ம் ஆண்டில் ஆசியாவில் தோன்றி பிளாக் நோய், கி.பி. 1348 -1350 ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் லட்சக்கணக்கானோரின் உயிரைக் குடித்தமையால் “கறுப்பு மரணம்” என்று அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.