உலகில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சக்திமிக்க நாடாக உருவாக சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இதற்காக அறிவியல் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் ஒரு ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சீன விஞ்ஞானிகள் உலக அளவில் புத்திசாலியான 2000 நபர்களின் டி.என்.ஏ.- க்களை சேகரித்துள்ளனர்.
இதைக் கொண்டு மரபியல் கூறுகளை தீர்மானிக்கும் ஜீன்களை கண்டறியும் ஆராய்ச்சியில் பெய்ஜிங் மரபியல் கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றால், பெற்றோர்கள் சிறப்பான கரு முட்டையை தேர்ந்தெடுத்து அறிவுக்கூர்மை மிக்க குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
சீனாவில் ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். எனவே அக்குழந்தைகளை புத்திசாலிகளாக பெற்றெடுக்க சீனா இது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








