உடுத்துறை ஆழியவளை சுனாமிப்பொது நினைவாலயத்தில் சுனாமியின் 13ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது(2004.12.26) 26.12.2017 பிரதேச செயலாளர் பொது ஈகை சுடரை ஏற்றிவைத்தார் இதில் வட மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கமும் பொது தூபிக்கு மாலை அணிவித்தது அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்பிரததேச மக்களுடன், வல்வெட்டித்துறை மக்களும் தங்கள் உறவினரருக்கு அஞ்சலி செலுத்தி அகவணக்கம் செய்துள்ளார்கள்
சுனாமி தந்து போன வலிகள் ஏராளம்! “3வயதில்” தாய் மற்றும் தம்பியை காவு கொடுத்து 13 ஆண்டுகளின் பின் தந்தையுடன்..வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் கண்ணீர் மல்க தனது தாயையும் தம்பியையும் புதைத்த கல்லறையைப் பார்த்து கதறிய கதறல் மனதை உலுப்பிவிட்டுப் போன அந்தக் கணம்.
மறக்க முடியாத கோர நாளின் நினைவுகள்
எப்படி மறப்பது அந்த அழிவுகளை. இன்றும் அந்த அழிவுகளில் இருந்து மீண்டு வர முடியாமல் எத்தனையோ மக்கள் மன நோயாளிகளாகவும், குடும்பத்தை கட்டியெழுப்ப முடியாதவர்களாகவும் தவிக்கின்றனர்.
ஆழிப்பேரலை அழித்தது உடமைகளையும் உயிர்களையும் மட்டுமல்ல பல தலைமுறைகளையும் தான்
காவுகொள்ளப்பட்ட அனைத்து மக்களுக்கும் அகவணக்கம்